வணக்கம் தலைவரே…

கடிதத்தை ஆரம்பிக்கும்போதே அபசகுனமா ஆரம்பிக்க வேண்டியிருக்கு… உண்மையிலேயே நீங்கதான் தலைவரா? பேப்பர்லயும் டி.வி-லயும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோட தலைவர் கே.எஸ்.அழகிரினுதான் சொல்றாங்க. கேட்கும்போது நல்லாத்தான் இருக்கு. ஆனா, எனக்குப் பெருத்த சந்தேகமே அதுலதாங்க. சரி, அந்தப் பஞ்சாயத்துக்குப் பின்னால வர்றேன்.

நீங்க ஒருபக்கம் கட்சிக் கட்டமைப்பை ‘வலுப்படுத்த’ ஈரோடு, தூத்துக்குடினு சுற்றுப்பயணம் போனீங்கன்னா, அப்பிடியே ஆப்போசிட்ல சிவகங்கை சின்ன ஜமீன் கார்த்தி சிதம்பரம் மதுரை, திருநெல்வேலினு சுற்றுப்பயணம் போக ஆரம்பிச்சிடுறாரு. அவரு அங்கே போய் கூட்டமெல்லாம் நடத்தி முடிச்ச பின்னாடிதான் உங்களுக்கே விஷயம் வந்துசேருது. அந்த அளவுக்குக் கட்சியைக் கட்டுக்குள்ளவெச்சிருக்கீங்க நீங்க!

சின்ன ஜமீனோட சித்து விளையாட்டுகளுக்கு முடிவுகட்டாதவரை கஷ்டம்தான் தலைவரே!

சரி, களத்துலதான் உங்களுக்குத் தொல்லை குடுக்குறாங்கன்னு பார்த்தா, சோஷியல் மீடியாவுலயும் வந்து அலம்பலக் குடுக்குறாங்களே தலைவரே… சரி, அவங்கதான் உங்க கிட்னி எடுக்கக் கூப்பிடுறாங்கன்னு தெரியுதுல்ல… அப்புறமும் ஏன் வான்ட்டடா வண்டியில ஏறி வாங்கிக் கட்டிக்கிறீங்க… நமக்கு நடக்குறதெல்லாம் போதாதா?

கே.எஸ்.அழகிரி

தி.மு.க – அ.தி.மு.க., தி.மு.க – பா.ஜ.க-னு சமூக வலைதளங்கள்ல மற்ற கட்சிகளுக்கு நடுவுல தீவிர சண்டை நடந்துக்கிட்டு இருக்கு. பார்க்கவே பயங்கரமா இருக்கு! ஆனா, நம்ம கட்சியில மட்டும்தான் தலைவரே கே.எஸ்.அழகிரி – கார்த்திக் சிதம்பரம், கே.எஸ்.அழகிரி – குஷ்புனு சொந்தக் கட்சிக்குள்ளயே பஞ்சாயத்து நடந்துக்கிட்டிருக்கு… பார்க்கப் பாவமா இருக்கு!

– தலைவர் யாருன்னே தெரியாமல் விழிபிதுங்கித் திரியும் அப்பாவி காங்கிரஸ் தொண்டனின் கடிதத்தை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/3iOr6Hu > நம்ம கட்சிக்குத் தலைவரு யாருங்க? https://bit.ly/3iOr6Hu

துரை மீது பாயும் தொண்டர்கள்!

பதவி ஆசை யாரை விட்டது?! தி.மு.க வரலாற்றில் பொதுச்செயலாளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற துரைமுருகனின் தீராத ஆசை நிறைவேறியிருக்கிறது.

‘கட்சிக்குப் புதிய பொதுச்செயலாளர் வந்துவிட்டதால், தொண்டர்கள் கொண்டாட்டமாக இருப்பார்கள்’ என்று நினைத்து தொண்டர்களிடம் பேசினால், கொலைவெறியில் கொந்தளித்துவிட்டார்கள்.

”அறுபது ஆண்டுகள் இந்தக் கட்சிக்காக உழைத்தவன் என்கிறார் அவர். இதுவரை தனது மாவட்டத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு மாநாட்டையாவது நடத்தியிருக்கிறாரா? சொந்தச் செலவில் பொதுக்கூட்டத்தைக்கூட நடத்த மாட்டார். முதலில் தலைவருக்குத் தாசனாக இருந்தவர், ஸ்டாலின் தலைவரான பிறகு அவருக்கும் தாசனாகிவிட்டார். அந்த நெருக்கத்தைவைத்தே தன் மகனுக்கும் சீட் வாங்கி எம்.பி-யாக்கினார்…”

துரைமுருகன்

அறிவாலயத்தில் சிலருடன் பேசினோம். ”எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு துரைமுருகன் அ.தி.மு.க தரப்புடன் வெகு இணக்கமாகச் செயல்பட்டது தலைமைக்கும் தெரியும். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியை, தனியாக துரைமுருகன் சந்தித்துப் பேசினார் என்கிற குற்றச்சாட்டு தலைமை வரை எட்டியது. இதற்கு துரைமுருகன் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை. அதற்குப் பிறகு நடந்த சில விவகாரங்களையும், எடப்பாடியுடன் துரைமுருகன் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது” என்று சஸ்பென்ஸ் வைத்தவர்கள், அதற்கான காரணத்தையும் சொன்னார்கள்…

– இதுகுறித்த முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க… https://bit.ly/2FOFwJa > “சொந்தக் கட்சிக்கே விசுவாசமாக இல்லை!” – துரை மீது பாயும் தொண்டர்கள் https://bit.ly/2FOFwJa

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர… ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.