பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் பயனர்கள் இனி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இனி OTP அவசியம் என அந்த வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

image 

“வாடிக்கையாளர்கள் மோசடி செய்யும் நபர்களின் வலையில் வீழாமல் இருப்பதற்காக இந்த நடைமுறையை கொண்டுவந்துள்ளோம். இதன் மூலம் எஸ்.பி.ஐ டெபிட் கார்டுகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையங்களில் இனி பணம் எடுக்கும் போது அவர்களது வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வருகின்ற OTP எண்ணை கொடுத்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும்.  

 image

தற்போதைக்கு பத்தாயிரம் மற்றும் அதற்கு மேல் பணம் எடுப்பவர்ளுக்கு மட்டுமே இந்த OTP நடைமுறை பின்பற்றபடும்.

வரும் 18 ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறையை நாட்டின் அனைத்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையங்களில் செயல்முறைக்கு வரவுள்ளது. 

image

அதனால் வாடிக்கையாளர்கள் இனி பணம் எடுக்க ஏ.டி.எம் மையங்களுக்கு செல்லும் போது அவசியம் மொபைல் போனையும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

அதே நேரத்தில் மொபைல் எண்ணை வங்கி கணக்கோடு இணைக்கத்தவர்கள் சம்மந்தப்பட்ட வங்கியின் கிளை அல்லது ஏ.டி.எம் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம்” என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.