நெல்லை மாநகர காவல்துறை அலுவலகத்தில் சிறுவர், சிறுமியருக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாநகர காவல் அலுவலகத்தில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

 

image

 பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள சிறுவர் அல்லது சிறுமியிடம் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுவது என்பது தண்டனைக்குரிய குற்றம், இதற்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம், இது குறித்த புகார்களை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல்துறை இணைந்து விழிப்புணர்வு நோட்டீசை பொது இடங்கள், காவல்நிலையங்கள் என மக்கள் வரும் இடங்களில் ஒட்டி வருகின்றனர்.

இன்று மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தேவ்ஆனந்த் நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நோட்டீசை வழங்கினார். அதனை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் காவல் நிலையத்தில் ஒட்டினார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகள் பொதுமக்கள் கூடும் இடங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்கள் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

 image

குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அதற்கான இழப்பீடு பெற்றுத் தரவும் குற்றத்திற்கான நியாயத்தை பெற்றுத் தரவும் காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கும். மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏதும் நடந்தால் உடனடியாக காவல்துறை மற்றும் 1098 என்ற எண்ணை உடனடியாக மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை இதன் மூலம் மக்களுக்கு தெரிவிப்படுத்த வேண்டும் என்றார்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கூறும் பொழுது, பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கூட வழங்கப்படலாம், எனவே இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 89 காவல்நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களான டீ கடைகள், சலூன் கடைகள் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஸ்டிக்கரை ஓட்டுவதன் மூலம் மக்களிடம், சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிரான தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.