சென்னையில் ஐந்து மாத காலத்திற்கு பிறகு இன்று மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

image

தினசரி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை – மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. விமான நிலையத்திலிருந்து – வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக இன்று தொடங்குகிறது.

சின்ன மலையிலிருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான சேவை செப்டம்பர் 9ம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

Peak hours என்னும் மெட்ரோ பயணிகள் அதிகமாக வரக்கூடிய நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவையும் இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மெட்ரோ நிறுத்தங்களிலும் மெட்ரோ ரயில் 50 வினாடிகள் நின்று செல்லும், முன்பு 20 வினாடிகள் மட்டுமே நின்று சென்று வந்த நிலையில். பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொறுமையாக மெட்ரோ ரயில்களில் ஏறுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புற ஊதா கதிர் மூலமாக காற்று சுத்திகரிப்பு செய்து அதில் உள்ள கிருமிகளை அழிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

image

மெட்ரோ ரயில் இருக்கைகளில், ஒரு இருக்கை இடைவெளிவிட்டு மட்டுமே பயணிகள் அமர முடியும்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள இரண்டு நுழைவாயில்கள் மட்டுமே செயல்படும்.

பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம்.

உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மெட்ரோ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.