நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக அளித்துவரும்  மருத்துவர்களிடையே பற்றாக்குறை நிலவும் நிலையில், 53 வயதான மருத்துவர் ஒருவர் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வருகிறார்.

image

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் கடந்த 24 ஆண்டுகளாக இனப்பெருக்க மற்றும் குழந்தை சுகாதார அதிகாரியாக பணியாற்றியவர் டாக்டர் எம்.ஹெச்.டாக்டர் ரவிந்திரன். அவருக்கு கடந்த 15 மாதங்களாக சம்பளம் வராததால் அவர் தற்போது ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் போது “ எனது இந்த நிலைமைக்கு ஐஏஎஸ் அதிகாரிகளே காரணம். இந்த பிரச்னையெல்லாம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு நான் உதவ மறுத்ததிலிருந்து தொடங்கியது. அதன் பின்னர் பொறுப்பேற்ற ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரியும் எனக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தார்.

image

வெளியாட்களிடம் பணியை ஒப்படைப்பது தொடர்பாக ஒரு தொழில் நுட்ப தவறு ஏற்பட்டது. நான் அவர்களிடம் அது என் தவறு இல்லை என்று எவ்வளவோ கூறி அதை நிரூபித்தேன். ஆனால் கடந்த வருடம் ஜீன் 6 ஆம் தேதி நான் பணியிடைநீக்கம் செய்யப்பட்டேன். அடுத்த நான்கு நாட்களில் கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் இது குறித்து மேல்முறையீடு செய்தேன். அவர்கள் அரசாங்க உத்தரவை மீறி மீண்டும் என்னை பணியமர்த்த உத்தரவிட்டனர்.” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.