ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் ஐஸ்கட்டி நிறைந்த பெட்டிக்குள் கிட்டத்தட்ட 2 1/2 மணி நேரத்திற்கும் மேலாக இருந்து சாதனைப் படைத்துள்ளார்.

image

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஜோசப் கோபெர்ல். இவர் ஒரு பெட்டியில் 200 கிலோகிராம் அளவு ஐஸ்கட்டிகளை கழுத்தளவு நிரப்பிக் கொண்டு,  2 1/2 மணி நேரம் 57 நொடிகள் இருந்து சாதனைப் படைத்துள்ளார்.

எப்படி இந்தச் சாதனையை செய்ய முடிந்தது என்று ஜோசப்பிடம் கேட்டபோது “ நான் வலியின் மீது கவனம் செலுத்தாமல், நல்ல உணர்ச்சிகள் மீது கவனம் செலுத்தி, அதனை கற்பனையில் கொண்டு வந்ததால் இந்தச் சாதனையை செய்யமுடிந்தது” என்றார்.

image

இதன் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு அரை மணி நேரம் ஐஸ்கட்டிகளுக்குள் இருந்து படைத்த இவரது சாதனையை அவரே தற்போது முறியடித்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இதே போன்று ஒரு சாதனையை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.