‘கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினால் உலகளவில் சுற்றுலா துறை சுமார் 320 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது’ என தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்.

image

ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 237.58 லட்சம் கோடி ரூபாய் (320 பில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பினை சுற்றுலா துறை சந்தித்து உள்ளதோடு, சுற்றுலாவை நம்பியே வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் 120 மில்லியனுக்கும் அதிகமானோரின் வேலை கேள்விக்குறியாக நிற்பதாகவும் அவர் இன்று தெரிவித்துள்ளார். 

image

‘உலகப் பொருளாதாரத்தின் மூன்றாவது பெரிய துறை சுற்றுலா. எரிபொருள் மற்றும் ரசாயனங்களுக்குப் அடுத்தபடியாக சுற்றுலா துறை உள்ளது. 2019 ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்த உலக வர்த்தகத்தில் 7 சதவீதத்தைக் சுற்றுலா கொண்டிருந்தது.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் கொரோனாவால் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிக்கும் மேலாகக் குறைந்து வருவாய் சரிந்ததற்கு காரணம்’ எனவும் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார். 

வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.