நீங்கள் புதிதாக தொழில் தொடங்குபவராக இருந்தாலும் சரி, அல்லது அனுபவமிக்க தலைமை அதிகாரியாக இருந்தாலும் சரி. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அல்லது தெரிந்துவைத்திருக்கவேண்டிய சில நிதி சம்பந்தப்பட்ட விதிமுறைகள் அல்லது வார்த்தைகள் உள்ளன. உங்கள் சகாக்கள், முதலீட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள் அல்லது சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் பேசும்போது இவை உதவியாக இருக்கும்.

சொத்துக்கள் (Assets)

சொத்து என்பது நிறுவனம் வைத்திருக்கக்கூடிய பண மதிப்புப் பெறுகிற ஒன்று. இது நிலம், வாகனம், சரக்கு, பணம், காப்புரிமை, பதிப்புரிமை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றை நிலையான சொத்து, தற்காலிக சொத்து, உறுதியான சொத்து மற்றும் தெளிவற்ற சொத்துகள் என பிரிவுகளாக பிரிக்கலாம்.

நிலையான சொத்துகள்(Fixed assets)

விரைவில் பணமாக மாற்றமுடியாத மற்றும் நீண்டகாலமாக நம்முடன் வைத்துக்கொள்ளும் வகையில் வாங்கப்படுபவை. உதாரணமாக, நிலம், கட்டிடங்கள்.

தற்காலிக சொத்துகள்(Current assets): சரக்கு, பணம் மற்றும் முதலீடு போன்ற விரைவில் பணமாக்கக்கூடியவை.

உறுதியான சொத்துகள்(Tangible assets): நம்மால் தொட்டு உணரக்கூடியவை. உதாரணத்திற்கு இயந்திரங்கள்

தெளிவற்ற சொத்துகள்(Intangible assets ): இவை நம்மால் தொட்டு உணரமுடியாதவை. உதாரணத்திற்கு காப்புரிமை, பதிப்புரிமை போன்றவை

image

கடன்பாடுகள்(Liabilities)

பொறுப்பு கடன் என்பது வணிகம் தொடங்கப்பட்டதிலிருந்து கிரெடிட் கார்டு கடன், சப்ளையர்களுக்கு செலுத்தவேண்டிய பணம் மற்றும் வங்கிக் கடன்கள் என அனைத்தும் அடங்கும். இவற்றை தற்காலிக மற்றும் நிலையான கடன்கள் என பிரிக்கலாம்.

தற்காலிக கடன்கள் என்பது சப்ளையர்களுடன் தொடர்புடையவை. இவற்றை ஒரு வருடத்திற்குள் முடித்தாக வேண்டும். நிலையான கடன்கள் என்பவை வங்கிக்கடன் போல ஒரு வருடத்திற்கும் மேலாக தீர்க்கப்படவேண்டியவை.

கடைசி வரி(Bottom line)

வருமான வரி அறிக்கையின் கடைசி வரியில் உள்ள இறுதி நபரை இது குறிக்கிறது. இது ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தைக் குறிக்கிறது. ‘’அடிமட்டத்தை பாதிக்கும்’’ என்ற வரியை கேள்விப்பட்டிருப்போம். இது ஒரு நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கும் மற்றும் குறைக்கும் விஷயங்களைக் குறிக்கிறது.

மொத்த விளிம்பு(Gross Margin)

இந்த மொத்த விளிம்பு அளவு என்பது, தயாரிப்பு அல்லது சேவையை உற்பத்தி செய்வதற்கான செலவுகளைக் கழித்தபின்னர், ஒரு நிறுவனம் வைத்திருக்கும் விற்பனை வருவாயின் வீதத்தைக் குறிக்கிறது. இந்த வருமானம் பின்னர் வாடகை, சம்பளம் மற்றும் அடுத்தநிலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

image

மூலதனம்(Capital)

இதை equity என்றும் சொல்லலாம். உரிமை, பங்கு, முதலீடு, தக்க வருவாய் அனைத்தும் அடங்கும். உண்மையில் இதில் ஒரு கணக்கியல் விதி உள்ளது. சொத்துகள் = பொறுப்புகள் + மூலதனம். அதாவது மூலதனத்தைக் கணக்கிட நீங்கள் சொத்துகளிலிருந்து கடன்களை கழிக்கவேண்டும்.

விற்பனை (Sales)

தொழில்நுட்ப ரீதியாக, பொருட்கள் அல்லது சேவைகள் வழங்கப்படும்போது, உடனடி கட்டணம் செலுத்தப்படுகிறதா இல்லையா மற்றும் ஒரு பொருளை விற்க உங்களுக்கு எவ்வளவு காலம் ஆகிறது மற்றும் எவ்வளவு காலம் முன்பு பணம் செலுத்தினீர்கள் என்பதையெல்லாம் விற்பனை பொருட்படுத்துவதில்லை.

செலவு(Expenses) மற்றும் வருமானம்(Profits)

அலுவலக வாடகை, நிர்வாகம் மற்றும் சந்தைப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஊதியம், தொலைபேசி பில்கள், இணைய செலவு, வரி மற்றும் வட்டி போன்ற அனைத்தும் அடங்கும். இவை தவிர விற்பனையாகும் பொருட்களில் இருந்து செலவினங்கள்போக குறிப்பிட்ட தொகை நமக்கு வருமானமாக கிடைக்கவேண்டும்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.