தோனிக்கு கிரிக்கெட் கிட் ஸ்பான்ஸர் செய்ய 6 மாதம் காலம் யோசித்தேன் என்று பாஸ் நிறுவனத்தின் தலைவர் சோமி கோலி கூறியுள்ளார்.

தோனியுடனான நினைவுகளை “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழுக்கு பகிர்ந்த அவர் “கிரிக்கெட் தொடர்பான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான நாங்கள் எப்போதும் புதிய திறமைகளை அடையாளம் காண விருப்புவோம். அப்போதுதான் ராஞ்சியை சேர்ந்த கிரிக்கெட் டீலரான பரம்ஜீத் சிங், தோனியைப் பற்றி என்னிடம் 1997 ஆம் ஆண்டு என்னிடம் கூறினார். தோனிக்கு இலவசமாக கிரிக்கெட் கிட் ஸ்பான்சர் செய்யும்படி கோரிக்கை விடுத்தார், தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்” என்றார்

image

மேலும் “தொடர்ந்து யோசித்த நான் 6 மாதம் காலம் கழித்து 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தோனிக்கு கிரிக்கெட் கிட்டை ஸ்பான்ஸர் செய்தேன். அப்போது எனக்கு தெரியாது இந்த பந்தம் 22 ஆண்டு காலம் நீடிக்கும் என்று. தோனி ஓய்வுப்பெற்ற செய்தியை கேட்டதும் முதலில் என்னால் நம்ப முடியவில்லை. பின்பு என்னால் தூங்க முடியவில்லை. தோனி ஒரு அருமையான வீரர், அவருடைய இந்தப் பயணத்தில் நாங்களும் உடனிருந்தோம் என்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது” என்றார் சோமி கோலி.

image

தொடர்ந்து பேசிய அவர் “2009 ஆம் ஆண்டு தோனியின் அறையில் இருந்தேன். அப்போது சச்சின் எங்களை சந்தித்தார். அவர் சென்ற பின்பு தோனியும், யுவராஜூம் முதலில் சச்சினுக்கு ஒரு பேட்டை செய்து தாருங்கள் என கூறினர். அந்த பேட்டின் மூலம்தான் ஆஸ்திரேலியாவுடன் சதமும் தென் ஆப்பிரிக்காவுடன் இரட்டை சதமும் சச்சின் அடித்தார். 2019 உலகக் கோப்பைக்கு முன்பு பேட்களில் நீல நிற பாஸ் ஸ்டிக்கரை தயார் செய்யுமாறு கூறினார். அவர் நினைத்திருந்தால் பேட் ஒப்பந்தம் மூலம் கோடிகளில் சம்பாதித்து இருக்கலாம், ஆனால் அவர் அதை செய்யவில்லைய அதனால்தான் இந்திய கிரிக்கெட்டின் கோஹினூர் வைரமாக இருக்கிறார் தோனி” என்றார் சோமி கோலி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.