2020-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் தொடங்கயிருந்த நிலையில், அதேசமயம் கொரோனா பொதுமுடக்கமும் இந்தியாவில் தொடங்கியது. இதனால் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா ? என்ற சந்தேகம் வலுத்தது. தற்போது எதுவும் சொல்லமுடியாது என்பதே பிசிசிஐ-ன் பதிலாக இருந்தது.

image

இதனால் கொரோனா பொதுமுடக்கத்தால் முடங்கிய மக்களுள், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும் தனிக்கவலை இருந்தது. கொரோனா பொதுமுடக்கத்தில் ஐபிஎல் எல்லாம் தேவையா ? என்ற பெரும் கேள்வி எழுந்ததாலும், அது ஒருபக்கம் நடந்துட்டு போகட்டுமே என்ற பதிலே ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. இதனால் ஐபிஎல் தொடர்பாக ஏதேனும் செய்திகள் வெளியாகும் போதெல்லாம் அது சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை பெற்றன.

image

ஐபிஎல் தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளியாகினாலும், குறிப்பாக தோனி தொடர்பான தகவல்களும், பேச்சுகளும் தொடர்ந்து அதிகமாக வெளியாகிக்கொண்டே இருந்தது தனிக்கதை. ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவதை காண அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர் களமிறங்காத தோனி ஐபிஎல் போட்டியில் கலக்குவார், இந்திய அணியில் இடம்பெறுவார் என தோனி ரசிகர்களின் எண்ணங்கள் கிரிக்கெட் பந்து போல தாவிக்கொண்டிருந்தன. ஆனால் ஐபிஎல் இல்லை என்றதும் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இனிமேல் தோனியின் கிரிக்கெட் வாழ்வு அவ்வளவு தானா ? என பேச்சுக்கள் எழத்தொடங்கின.

image

மீண்டும் ஐபிஎல் கதைக்கு வருவோம். பொதுவாக இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகராக ஐபிஎல் போட்டிகளுக்கும் ரசிகர்களின் தீவிரம் இருக்கும். போட்டிகளை காண வெளி மாநிலங்களுக்கு பயணிப்பது, உடல் முழுவதும் தாங்கள் ஆதரிக்கும் அணியின் வண்ணத்தை பூசிக்கொள்வது, ஐபிஎல் டிக்கெட்டுகளை பிளாக்கில் வாங்குவது, டிக்கெட் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் இரவிலிருந்தே காத்துக்கிடப்பது உள்ளிட்டவை அதன் மீது ரசிகர்கள் வைத்திருந்த ஆர்வத்திற்கு சான்றாக கூறலாம். இதற்கெல்லாம் மேலாக 2018ஆம் ஆண்டு சென்னையில் நடந்த காவிரி போராட்டத்தின் காரணமாக ஐபிஎல் போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டது. அப்போது ஒரு சிறப்பு ரயிலையே விட வைத்து, அதில் இங்கிருந்து பெரும் கூட்டம் ஐபிஎல் போட்டியை காண ஆர்வத்துடன் சென்றது பெரும் கவனத்தை பெற்றது.

image

ஐபிஎல் போட்டிகள் மீது இந்திய ரசிகர்கள் காட்டும் ஆர்வத்தை பார்த்து பெரும் நிறுவனங்கள் அனைத்தும் அதற்கு ஸ்பான்ஸர் செய்ய வந்தன. இதனால் ஐபிஎல் கோடிகளில் புரண்டன. இதேபோன்று கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகங்களும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் காலத்தை பொற்காலமாக பார்த்தன. டிக்கெட் எவ்வளவு விலை என்றாலும், ஒன்று கூட இல்லாமல் விற்று தீர்ந்துவிடும். ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த வீரர்களை நேரில் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சி பொங்கும். இதனால் ஐபிஎல் போட்டிகளை ஒரு திருவிழாவாக பார்த்து வந்தனர். அதற்கு ஏற்றாற் போல கோடை விடுமுறையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டதால் குடும்பத்துடன் ரசிகர்கள் கிளம்பிவிடுவார்கள்.

image

இந்நிலையில் ஐபிஎல் என்பது நடைபெறாது, நடந்தாலும் ரசிகர்கள் இருக்கமாட்டார்கள் என்பது ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களையும் களங்கடிக்கச் செய்தது. அத்துடன் ஐபிஎல் போட்டியின் மூலம் பெரும் லாபம் பார்க்கலாம் என காத்திருந்த பல்வேறு நிறுவனங்களும், அதை சார்ந்திருந்த தொழிலாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இவ்வாறாக பெரும் இழுபறிக்கு பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ உறுதி செய்தது. பின்னர் 30 முதல் 50% பார்வையாளர்களை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக ஐக்கிய அமீர கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறு ஆறுதல் போல இருந்தாலும், இதிலிருக்கும் எதார்த்தங்களின்படி சாமானிய ரசிகர்களுக்கு இது எட்டாக்கனியாக இருக்கும் என தோன்றுகிறது.

image

ரசிகர்களுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த ஐபிஎல் ஒரு பெரும் போராட்டமாக தான் இருக்கும். ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் வீரர்கள் முதலில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு அணியினரும் தனித்தனியாக ரிசார்ட்டுகள் அல்லது சொகுசு விடுதிகளில் தங்கப்போகிறார்கள். அவர்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேபோன்ற மைதானத்தில் பங்கேற்கும் ரசிகர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் இருக்கும். இந்த விதிமுறைகள் ஐபிஎல் போட்டிகளை அதன் எதார்தத்தில் இருந்து விலக்கி, நிர்பந்திக்கப்பட்ட போட்டிகளாக மாற்றிவிடுமோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.