ரஷ்யாவின் மாஸ்கோவில் பிறந்த எகடரினா நான்கு வயதிலிருந்தே ஸ்கேட்டிங்கில் பயிற்சி செய்து வந்துள்ளார். வளர்ந்ததும் ஃபிகர் ஸ்கேட்டிங்கில் கவனம் செலுத்திய அவர் 2017இல் நடைபெற்ற உலக ஜுனியர் சாம்பியன்ஷிப் மற்றும் ஜுனியர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இணையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

image

ரஷ்யாவில் பிறந்த அவர் ஃபிகர் ஸ்கேட்டிங்கில் முறையான பயிற்சி பெறுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு குடியேறினார். அவர் வென்ற தங்கப்பதக்கங்களும் ஆஸ்திரேலியாவுக்காக வென்றவை. இந்த சூழலில் திடீரென கடந்த சனிக்கிழமை அன்று ரஷ்ய மொழியில் ‘ஐ லவ்’ என எழுதி வைத்து விட்டு இறந்துள்ளார் அவர். இது தற்கொலையாக இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. 

எகடரினா ஆறாவது மாடியிலிருந்து குதித்தாக ரஷ்ய ஊடக நிறுவனங்கள் சொல்கின்றன. இந்த தகவலை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியும் உறுதி செய்துள்ளது. 

image

எகடரினா 2018 குளிர் கால ஒலிம்பிக் தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக பங்கேற்றவர். அவரது பயிற்சியாளர் ஆண்ட்ரி கெகாலோ தெரிவித்துள்ளது ‘மிகுந்த மன அழுத்தத்தோடு அவள் காணப்பட்டாள். அதனால் கடந்த ஜனவரியிலிருந்தே பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தாள்’ என பத்திகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

அவரது இழப்புக்கு தடகள உலகம் மவுன அஞ்சலி செலுத்தி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.