எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரவர ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சமூக செயற்பாட்டளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறைக்காவலில் இருந்தபடியே மும்பை ஜே.ஜே மருத்துவமனையில் கடந்த செவ்வாய் கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் கடந்த 2018 ஆம் ஜனவரி 1 ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையின்போது கலவரம் வெடித்தது. அதற்கு முதல்நாள் 2017 டிசம்பர் 31 ஆம் தேதி பீமா கோரேகான் நிகழ்வின் வெற்றியை கொண்டாடும் விதமாக கூட்டப்பட்ட ’எல்கர் பரிஷத்’ மாநாட்டில் மத்திய அரசுக்கு எதிராக சதி செய்ததாகக்கூறி கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட ஒன்பது சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். 
 
image
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வரவர ராவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அவர் சுயநினைவை இழந்ததாகவும்கூறி மருத்துவமனை சிகிச்சை அளிக்க அவரது மனைவி ஹேமலதா கோரிக்கை வைத்திருந்தார். 81 வயதாகும் அவரது விடுதலையை முன்வைத்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கும் ஆனது. 
 
”சரியான மருத்துவ சிகிச்சையை அரசின் காவலில் உள்ள ஒருவருக்கு அளிக்காமல் இருப்பது உயிருக்கு தெரிந்தே ஆபத்தை விளைவிப்பது” என்று பிரபல வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் கண்டித்திருந்தார். இந்நிலையில்தான் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.