காஷ்மீர் லே பகுதியில் உள்ள பொது மருத்துவமனை வசதிகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்திய ராணுவம் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று லே பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையை காஷ்மீருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அம் மருத்துவமனை குறித்து அவதூறு பேச்சுக்கள் எழுந்தன. இந்திய ராணுவம் அங்குள்ளவர்களுக்கு சிறப்பான சிகிசையை வழங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் அமைந்துள்ள சில வார்டுகள் தனிமைப்படுத்துதல் வசதிக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

image

 

மருத்துவமனையின் மண்டபம் போன்றதொரு அறை தற்போது வார்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அறையானது பயிற்சிக்கான ஒலி,ஒளி அமைப்புகள் வசதி கொண்டதாக இருந்தது. தற்போது அந்த அறையானது கொரோனா பரவலுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.கல்வான் மோதலில் காயமடைந்த வீரர்கள் கொரோனாவுக்கான தனிமைப்படுத்துதல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ராணுவத்தின் மூத்த அதிகாரி எம்.எம்.நரவனே மற்றும் அதிகாரிகள் அதே இடத்தில் காயமடைந்த வீரர்களை பார்வையிட்டனர்.” என்று கூறப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.