தூத்துக்குடி சாத்தான்குளத்தில் விசாரணைக்கு சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் மறைவதற்குள் அதே பகுதியில் காவலர்கள் தாக்கியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் கட்டட தொழிலாளியான கணேச மூர்த்தி. இவர் மதுபோதையில் பைக்கில் சென்றபோது தவறிவிழுந்துள்ளார். அப்போது அந்த பகுதியிலிருந்த உளவுத்துறை காவலர் கார்த்திக், கணேச மூர்த்தியை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று 4 காவலர்களுடன் தாக்கியதாக கூறப்படுகிறது.

Couple commits suicide in Ghaziabad, leaves behind 9-month-old child |  India News – India TV

இதில் மனமுடைந்த கணேசமூர்த்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மகனின் பள்ளி புத்தகத்தில் தனது மரணத்திற்கு உளவுத்துறை அதிகாரி கார்த்திக் தான் காரணம் என்று கணேச மூர்த்தி எழுதிவைத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற எட்டயபுரம் காவல்துறையினர் கணேசமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணேசமூர்த்தியின் தற்கொலைக்கு காரணமான உளவுத்துறை காவலர் கார்த்திக்கை கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.