விராட் கோலியின் இன்ஸ்டா பதிவில் வார்னர் இட்ட பதில் கருத்து இப்போது ‘ட்ரோல்’ ஆகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. கொரோனா கட்டுக்குள் வராததால் பின்னர் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன. வழக்கமாக ஆடுகளத்தில் அதிதீவிரமாக இயங்கும் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கிப் போய் உட்கார்ந்துள்ளனர்.

image

தோனி தன் பண்ணை வீட்டில் தனது மகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழித்து வருகிறார். வேறு சில வீரர்கள் இன்ஸ்டா பக்கத்தில் நேரலையில் பங்கேற்று ரசிகர்களிடம் கலந்துரையாடி வருகின்றனர். விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் ஜாலியான வீடியோக்களை இன்ஸ்டாவில் அடிக்கடி பதிவேற்றி வருகிறார். சுருக்கமாக சொன்னால் ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களும் இப்போது இன்ஸ்டா பக்கத்தில்தான் மும்முரமாக இருக்கின்றனர்.

 

“என் குழந்தைகளை மிகவும் மிஸ் செய்கிறேன்”- ஷாகித் அப்ரிடி வேதனை !

 

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் மிக ஜாலியாக நாற்காலியில் உட்கார்ந்து புத்தகம் படிப்பதைப்போன்ற காட்சி பதிவாகியிருக்கிறது. மேலும் கோலி, தனது தனித்துவமான தாடியுடன் அதில் மிக அழகாக தென்படுகிறார். அந்தப் படத்தில் பதிவில் கோலி, “மும்பையில் நிலவும் வானிலை”யை அனுபவிப்பதாகக் கூறியுள்ளார். அந்தப் பதிவில் “மும்பையில் மீண்டும் வானிலை மாறியுள்ளது. மும்பையில் தொடங்கியுள்ள முதல் பருவமழையை வெளியே உட்கார்ந்து அனுபவிக்கிறேன். எதையாவது படிக்க இதைவிட சிறந்த நேரம் வேறு இருக்க முடியாது” என எழுதியுள்ளார்.

image

கோலியின் பதிவுக்குப் பலரும் மிக சுவாரஸ்யமான பதில்களை இட்டு வருகின்றனர். இதற்கு டேவிட் வார்னர், “இளம் வீரர் விராட் கோலியின் அந்த தாடியில் ஓரத்தில் லேசாக நரை உள்ளது” எனப் பொருள்படும்படி கலாய்த்துள்ளார். மேலும் இதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஏபி டிவில்லியர்ஸ் “sophisticated” எனப் பதிலளித்தனர். அதாவது ரொம்ப சொகுசானவர் எனக் கூறியுள்ளார். வார்னரின் பதிவு இப்போது ‘ட்ரோல்’ ஆகியிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.