பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான சுஷாந்த், தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட `எம்.எஸ்.தோனி: அண்டோல்டு ஸ்டோரி’ படம் மூலம் கவனம் பெற்றார். பாலிவுட் நடிகர்களில் டி.வியிலிருந்து பெரிய திரையில் சாதித்த மிகச்சிலரில் முக்கியமானவர் சுஷாந்த். 2012ல் வெளியான `Kai Po Che’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சுஷாந்த், அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். பிகே மற்றும் கேதர்நாத் உள்ளிட்ட படங்கள் அவரது கரியரில் முக்கியமான படங்கள். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இவரது கரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

தோனியுடன் சுஷாந்த்

2019ல் ஷ்ரத்தா கபூரூடன் இணைந்து சுஷாந்த் நடித்திருந்த ‘Chhichhore’படம் வணிகரீதியில் மட்டுமல்லாது விமர்சனரீதியிலும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது. முகேஷ் சாப்ரா இயக்கத்தில் சஞ்சனாவுடன் இவர் நடித்துள்ள ‘Dil Bechara’படம் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக அந்தப் படம் தயாராகியிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்னையால், அந்தப் படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பாலிவுட்டில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருந்த சுஷாந்த், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக மருத்துவரிடம் தொடந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாலிவுட் திரையுலகமும் ஆட்டம் கண்டிருக்கிறது. நடிகர், நடிகைகள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரையில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். இந்தநிலையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள சுஷாந்த்தின் வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில், அவரை போலீஸார் சடலமாக மீட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சுஷாந்த்

Also Read: ”ஒரு நாளைக்கு 200 ஹெலிகாப்டர் ஷாட்ஸ்..!” – ரீல் ’தோனி’ சுஷாந்த் சிங் ராஜ்புத் பேட்டி #Exclusive

சமீப நாள்களில் ரிஷி கபூர் மற்றும் இர்பான் கான் என இரு பெரிய நட்சத்திரங்களை இழந்த பாலிவுட், 34 வயதே ஆன இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலை முடிவால் கலங்கியிருக்கிறது. அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல் ஆரோக்கியத்தைப் போல் மன ஆரோக்கியத்தையும் பேணுங்கள் எனவும் நெட்டிசன்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.