இந்திய விவசாய மக்களை சிறப்பாக பயன்படுத்தினால் ஒட்டுமொத்த உலகத்திற்கே நம்மால் உணவு அளிக்க முடியும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசு தேவ் கூறியுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் ’ஞானியுடன் ஒரு உரையாடல்’ என்னும் தலைப்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசு தேவ் அரசியல் கட்சி தலைவர்கள், விஞ்ஞானிகள், தொழில் நிறுவனத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளோரிடம் தொடர்ந்து உரையாடி வருகிறார்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஜக்கி வாசு தேவுடன் ’ஆன்லைன்’ வழியாக உரையாடினார். இந்த உரையாடலில் கிரிக்கெட், வைரஸ் தொற்று, காவேரி, விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட பல தலைப்புகளில் ரவிச்சந்திரன் ஜக்கி வாசு தேவ் அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தார்.

image

அந்த வரிசையில் பொறியியல் மற்றும் மருத்துவத்தை போல விவசாயத்தையும் மதிப்புமிக்க லாபகரமான தொழிலாக மாற்ற படித்தவர்கள் தங்கள் குழந்தைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டுமா என்று அஸ்வின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஜக்கி வாசு தேவ், “ஆம், 100 சதவீதம் அவ்வாறு நடக்க வேண்டும். தற்போது விவசாயம் செய்யும் விவசாயிகளில் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே தங்களின் குழந்தைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புகின்றனர்.

மண்ணை உணவாக மாற்றுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நீங்களும் நானும் உணவு உண்பது விவசாயிகளால் தான். வெளிநாட்டில் இருந்து பெரிதாக எவ்வித உணவு இறக்குமதியும் செய்யாமல் இந்த தேசத்தில் வாழும் 140 கோடி மக்களுக்கு அவர்கள் உணவு அளித்து வருகிறார்கள். வெறும் பாரம்பரிய அறிவை மட்டும் வைத்து கொண்டு, பெரிய தொழில்நுட்ப உதவிகள் இன்றி இதை அவர்கள் செய்து வருகின்றனர்.

image

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நிலவும் அட்சரேகை பரவல் காரணமாக ஆண்டு முழுவதும் இங்கு விவசாயம் நடக்கிறது. கிட்டத்தட்ட உலகிற்கு தேவையான அனைத்து விளைபொருட்களையும் இங்கு விளைவிக்க முடியும். இந்தியாவிலுள்ள 65 சதவீத விவசாய மக்களை சிறப்பாக பயன்படுத்தினாலே  நம்மால் ஒட்டுமொத்த உலகத்திற்கே உணவு அளிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்.” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.