> என் சகோதரர் ரூ.10 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்யப்போகிறார். எவ்வளவோ சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறார். அவருக்கு உங்கள் ஆலோசனை என்ன?

– கே.கே

”கடன் வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தற்கொலைக்குச் சஅமம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இருவர் கடந்த ஆறு மாதங்களில் தங்கள் வாழ்க்கைத்தரத்தையே இழந்த கொடுமையை நான் பார்த்தேன். பங்குச் சந்தை என்பதே ரிஸ்க் மிகுந்த முதலீடு. இதில் கடன் வாங்கி முதலீடு செய்யவே கூடாது.

உதாரணமாக, ரூ.100 கடன் வாங்கி, மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், உங்கள் முதலீட்டுச் செலவு ரூ.135-ஆக உயர்ந்திருக்கும். ஆனால், நீங்கள் முதலீடு செய்த தொகை தற்போது ரூ.50-ஆகக் குறைந்திருக்கும். இந்த நஷ்டத்தைத் தாங்க முடியாமல் நல்ல பங்குகள் உங்களிடம் இருந்தால், அவற்றையும் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

எனவே, ஓய்வுக்காலத்துக்கென வைத்திருக்கும் பணத்தையோ அல்லது கடன் வாங்கியோ முதலீடு செய்வது கூடவே கூடாது.”

ஜி.சொக்கலிங்கம்

> இப்போதைய நிலையில் வாரன் பஃபெட்கூட முதலீடு செய்யாமல் இருக்கிறார். சந்தையில் முதலீடு செய்ய எது சரியான நேரம், அடுத்த ஆறு மாதங்களில் இந்தியச் சந்தையில் முதலீடு செய்யலாமா?

– சதீஷ் சுப்பையா

”இப்போதுள்ள நிலையில் வேல்யூ இன்வெஸ்டர்கள் யாருமே பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்ய யோசிப்பார்கள். 2008-ல் அவர் நிறைய முதலீடு செய்ததற்குக் காரணம், அப்போது வங்கி மற்றும் நிதித்துறை தவிர, மற்ற துறைகள் பெரிய அளவில் பாதிப்படையவில்லை.

ஆனால், இப்போது பாதிக்கப்படாத துறைகள் மிகச் சிலவே இருக்கின்றன. இந்த நிலையில், நீண்ட காலத்துக்குப் பிறகு தேவைப்படும் பணத்தைத் தரமான லார்ஜ்கேப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்வதே சரி.”

– கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று ஜூம் வீடியோ தளத்தின் மூலம் முதலீட்டாளர் பயிற்சி வகுப்பை நடத்தியது நாணயம் விகடன்.

இந்தப் பயிற்சி வகுப்பில், கொரோனாவுக்குப் பிறகு பங்குச் சந்தை முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கமாகப் பேசினார் பங்குச் சந்தை நிபுணரான ‘ஈக்னாமிக்ஸ்’ சொக்கலிங்கம். பேசி முடித்த பிறகு முதலீட்டாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொன்னார் அவர். பயிற்சி வகுப்பில் பதில் சொல்லாத சில கேள்விகளுக்கு நாணயம் விகடன் மூலம் பதில் சொன்னார். அவற்றில் இரண்டு கேள்வி – பதில்களே மேலே உள்ளவை.

> வங்கிசாரா நிதி நிறுவனங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? | வேல்யூ இன்வெஸ்ட்டிங் செய்வதற்கேற்ற மாதிரி 10 லார்ஜ்கேப் பங்குகளைச் சொல்லுங்கள். | ஒரு நிறுவனப் பங்கின் மதிப்பீட்டையும், உயர்ந்த தரத்தையும் எப்படி அலசி ஆராய்வது? | ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்வதுபோல் 20 ஸ்மால்கேப் மற்றும் மிட் கேப் பங்குகளைச் சொல்லுங்கள். | இந்த ஆண்டின் இறுதியில் நிஃப்டி எந்த அளவில் இருக்கும்? | வாராக்கடன் பிரச்னையால் ஒரு வங்கிப் பங்கின் விலையில் எப்படி பாதிப்பு ஏற்படும்? | தொற்றுநோயால் பாதிப்படைந்திருக்கும் பொருளாதாரத்தைச் சரிசெய்ய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் பயன்படுமா?

இந்தக் கேள்விகள் – சந்தேகங்களுக்கு அவர் அளித்த முழுமையான பதில்களை நாணயம் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > “பங்கு முதலீடு… கவனமாகச் செய்தால் லாபம்!” – ‘ஈக்னாமிக்ஸ்’ ஜி.சொக்கலிங்கம் https://bit.ly/3cq6r8X

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.