சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், ஜனவரி 30ம் தேதி இந்தியாவுக்குள் நுழைந்தது. சீனாவில் இருந்து சென்னை வந்த மாணவருக்கு முதன்முதலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஒரு லட்சத்து 25ஆயிரம் பேரை தாண்டியுள்ளது.

51ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 3720 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தில் முதல் தொற்று முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தொற்று கண்டறிப்பட்டு கிட்டத்தட்ட 113 நாட்களுக்கு பிறகு சிக்கிமில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

image

டெல்லியில் இருந்து வந்த 25 வயது மாணவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிக்கிம் அரசு தெரிவித்துள்ளது. தற்போது அந்த இளைஞரோடு தொடர்புடையவர்களை கண்டறியும் பணியில் மாநில சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது

image

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 7,491 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

 ஊரடங்கால் தள்ளிப்போன திருமணம்: மணமகன் வீட்டிற்கு 80கிமீ நடந்தே சென்ற மணமகள்!!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.