தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பொது முடக்கம் மே 17ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்தும் பொது முடக்கம் இருக்கும் எனப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்றும், பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுக்குத் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

image

மறு உத்தரவு வரும் வரை தொடரும் தடைகள் :

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாடு, மதம் சார்ந்த கூட்டங்கள், திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்கள்), உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தளங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள்.

சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

விமானம், ரயில், பேருந்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில், சென்னையிலிருந்து பிற மாநிலங்களுக்கான ரயில்.

டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா, மெட்ரோ ரயில், மின்சார ரயில்

தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்

இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் அனுமதியில்லை. மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போதைய நடைமுறைகள் தொடரும்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. தளர்வுகள் எதுவும் இல்லை.

நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாடு பகுதிகளுக்கு எந்தத் தளர்வும் இல்லை. தற்போதைய நடைமுறை தொடரும்.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிரப் பிற பகுதிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட தொடரும்

image

தளர்வுகள் :

கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவை :

அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு அரசு இ-பாஸ் தேவையில்லை

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பொதுமக்கள் போக்குவரத்தைப் பயன்படுத்தக் கோரிக்கை

ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல அரசு இ-பாஸ் அவசியம்

அனுமதியுடன் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், பெரிய வகை கார்களில் 3 பேரும், சிறிய கார்களில் 2 பேரும் செல்ல அனுமதி

25 மாவட்டங்களில் அரசு இ-பாஸ் இல்லாமல் அத்தியாவசிய, வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணிகளுக்கு வாகனத்தைப் பயன்படுத்தலாம்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100% பணியாளர்களுக்கு அனுமதி

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிரத் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 நபர்களுக்குக் குறைவாக ஆட்களைக் கொண்ட தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம். 100 நபர்களுக்கு மேல் பணியாளர்கள் கொண்ட தொழிற்சாலைகள் 50% அல்லது அதிகபட்சம் 100 நபர்களுடன் இயங்கலாம்.

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தனியார் மற்றும் வியாபார நிறுவனங்கள் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காகக் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கலாம்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களைத் திருத்தும் பணிக்கு அனுமதி

தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்குத் தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெற அனுமதி. ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும்.

மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் அரசு இ-பாஸ் உடன் மருத்துவச் சிகிச்சைக்குச் சென்று வர டாக்ஸி, ஆட்டோவை பயன்படுத்தலாம்.

பொது அறிவிப்பு :

மக்கள் முகக் கவசங்களை அணியவும், சமூக இடைவெளியினை பின்பற்றவும், சோப்பைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவவும், கிருமி நாசினிகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.