ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனான டேவிட் வார்னர், ‘முக்காலா முக்காபுலா’ பாடலுக்கு நடனமாடி அதனை டிக்டாக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் ஐபிஎல் டி20 போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்தக் காலத்தில் வீட்டிலேயே இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.  
 
india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
இதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் கொஞ்சம் ஜாலியாக டிக்டாக்கில் தனது மனைவி குழந்தைகளுடன் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார். அண்மையில் கூட கேத்ரீன் கைப்பின் பாலிவுட் பாடலுக்குத் தனது மகளுடன் நடனமாடி வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு, தெலுங்கு பாடல் ஒன்றுக்குத் தனது மனைவி கேண்டிஸ் உடன் நடனமாடினார். 
 
image
 
பின்பு “தேவர் மகன்” படத்தில் வந்த “இஞ்சி இடுப்பழகி” பாடலின் மெட்டுக்கு டேவிட் வார்னர் குடும்பத்தினர் நடனமாடியுள்ளனர். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வார்னர் “நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்” எனத் தெரிவித்தார். இதனிடையே இரு தினம் முன்பு “பாகுபலி” படத்தில் இடம்பெற்ற “அமரேந்திர பாகுபலியாக நான்” என்ற வசனத்தைப் பேசி டிக்டாக் செய்திருந்தார்.  
 
இந்நிலையில் பிரபு தேவா நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்த ‘காதலன்’ படத்தில் இடம் பெற்ற ‘முக்கால முக்காபுலா’ பாடலுக்குத் தனது குடும்பத்தினருடன் இணைந்து நடனமாடி வெளியிட்டுள்ளார். தொடர்ந்து அவர் தமிழ் சினிமா பாடல்கள் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருவதால் அவரது வீடியோக்கள் வைரல் ரகமாக மாறியுள்ளது.
 
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.