உலகம் முழுவதும் கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில், புதிய தயாரிப்புகள் பலவற்றையும் அறிமுகம் செய்யாமல் டெக் நிறுவனங்கள் தள்ளி வைத்து வந்தன. தற்போது லாக்-டௌன் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்படும் இந்தச் சூழலில் கேட்ஜெட் பிரியர்களுக்குக் குதூகலமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது Mi நிறுவனம். வருகின்ற மே 8-ம் தேதி பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் Mi 10 ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது அந்த நிறுவனம். இத்துடன் கூடுதல் சர்ப்ரைஸாக அதே நாளில், Mi நிறுவனம் அதன் Mi True Wireless Earphones 2-யும் சேர்த்து அறிமுகப்படுத்துகிறோம் என்று ட்விட்டர் வலைப்பக்கத்தில் செய்தியை வெளியிட்டது Mi நிறுவனம்.

எப்போதும் போல இதுவும் ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!’ என்ற உணர்வை புகைப்படங்களைப் பார்த்ததும் தருகிறது இது. ஆம், அப்படியே ஆப்பிளின் Airpods வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த Mi True Wireless Earphones 2. ஆனால், தனது MIUI மூலம், Xiaomi தொலைபேசிகளுடன் தானாக கனெக்ட் ஆகும் இது. இது இரைச்சல் குறைப்பு (environmental noise reduction), தொடுதல் (touch gesture) மூலம் இசையைக் கட்டுப்படுத்தல், இன்-பில்ட் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட்டும் கொண்டு வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெறும் 4.15 கிராம் எடையைக் கொண்ட இது, ப்ளுடூத் 5.0 மூலம் இயங்கும்.

Also Read: `காபிகேட் எல்லாம் பேசக் கூடாது!’ – ரியல்மீயைச் சீண்டும் ஷாவ்மி; குவியும் விமர்சனங்கள்

ஒருமுறை சார்ஜ் செய்த பிறகு 4 மணிநேரம் தொடர்ச்சியாக ஓடும் திறன் இருக்கும். இதற்கான சார்ஜிங் கேஸையும் (Charging Case) சார்ஜ் செய்யமுடியும் என்பதால் அதைக்கொண்டு 14 மணிநேரம் வரை இதன் பயன்பாட்டை நீடிக்கமுடியும் என்கிறது ஷாவ்மி தரப்பு.

வெள்ளை நிறத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டுள்ள இந்த இயர்போன்கள், இந்திய விலையில் சுமார் ரூபாய் எப்படியும் 5,000 ரூபாயைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கலாம்.

முழுமையான தகவல்களுக்கு மே 8 வரை காத்திருப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.