மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு எதிராக நடைபெற்று வரும் யுத்தத்தில் முன் கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் இருந்து வருகின்றனர். இத்தகைய போற்றுதலுக்குரிய செயல்களை இவர்கள் செய்து வந்தாலும் யதார்த்தத்தில் நிலைமை வேறாக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் மக்களே எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சக மருத்துவர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டது நாட்டிற்கே பெரிய அவமானத்தை உண்டாக்கியுள்ளது. சில இடங்களில் மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
image
 
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வாரை சிறைத் தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 
 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களைத் துன்புறுத்தினால் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.