சத்தீஸ்கரில் 7 மாத கர்ப்பிணியான போலீசார் ஒருவர் சாலையில் நின்று பணியில் ஈடுபட்டு வருகிறார்
உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இரவு பகல் பாராமல் கொரோனாவை விரட்டுவதற்காக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சத்தீஸ்கரில் 7மாத கர்ப்பிணியான போலீசார் ஒருவர் சாலையில் நின்று பணியில் ஈடுபட்டு வருவது பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. ராய்ப்பூரில் 7மாத கர்ப்பிணியான அம்ரிதா சாலையில் நின்று பணியாற்றி வருகிறார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், கர்ப்பிணியான நான் சாலையில் நின்று பணியில் ஈடுபட்டிருப்பது மற்ற போலீசார்களுக்கு ஊக்கமாக இருக்கிறது. உயர் அதிகாரிகளும், எனக்கு கீழ் பணியாற்றுபவர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அம்ரிதாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் உங்களுடைய உடல்நலமும் மிக முக்கியம், கவனமாக இருங்கள் என பாசமான கோரிக்கைகளையும் பலரும் முன்வைத்துள்ளனர்
டெல்லி: கொரோனா போராட்டம் – ரூ.1 கோடி நிவாரணத்தில் மேலும் சில துறைகள் சேர்ப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM