இந்தியாவிலேயே முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்ட மாநிலம் கேரளா. சீனாவிலிருந்து வந்த திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது மருத்துவக் கல்லூரி மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது.
அதற்கு பின் இத்தாலி சுற்றுலா பயணிகள் என கொரோனா எண்ணிக்கை கேரளாவில் உயரத் தொடங்கியது.கொரோனாவின் ஆபத்தை உணர்ந்த கேரளா, கொரோனாவுக்கு எதிரான தனது போராட்டத்தைத் துவங்கியது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சரியான திட்டமிடல் என தற்போது கொரோனா பாதிப்பை வெகுவாக கேரளா குறைத்துள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 20-க்கு பிறகு, கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு செய்யப்படும் மாவட்டங்களில் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் வாகனம் ஓட்டி வந்தால் இந்த விதியில் சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சியை வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM