உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கும் வார்த்தை கொரோனா. வறுமை, வல்லரசு என அனைத்து நாடுகளுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. நாட்டின் பிரதமர்கள் கூட கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இப்படி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் சில நாடுகள் சந்தித்த உயிரிழப்புகள் எவ்வளவு? இது தொடர்பாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி,

image

உலக அளவில் 185 நாடுகளை கொரோனா பாதித்துள்ளது. மொத்தம் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், 1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை கொரோனா பறித்துள்ளது. இது தினம் தினம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே போல் 4 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவிடம் இருந்து மீண்டுள்ளனர்.

image

கொரோனா தொடங்கியது சீனா என்றாலும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பாதிப்பை வெகுவாக குறைத்தது சீனா. கிட்டத்தட்ட 83 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 3313 பேர் உயிரிழந்தனர். 

image

இத்தாலி அதிகமான உயிரிழப்புகளை சந்தித்தது. ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 19,899 பேர் உயிரிழந்தனர். அதிக பாதிப்பு, அதிக உயிரிழப்பு என தினம் தினம் எண்ணிக்கையில் மேல்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது அமெரிக்கா. இதுவரை ஐந்தரை லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 21ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.

 

நாடுகள் பாதிப்புகள் உயிரிழப்புகள்
அமெரிக்கா 5,42,023 21,418
ஸ்பெயின் 1,66,019 16,972
இத்தாலி 1,56,363 19,899
பிரான்ஸ் 1,33,667 14,393
ஜெர்மனி 1,26,656 2,908
இங்கிலாந்து 85,175 10,612
சீனா 83,134 3,343
ஈரான் 71,686 4,474
துருக்கி 56,956 1,198
பெல்ஜியம் 29,647 3,600

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.