கொரோனா நோய் தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த மார்ச் 27-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட அவர், இல்லத்தில் இருந்தபடியே பிரதமர் அலுவலகப் பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி, கடந்த 5-ஆம் தேதி போரிஸ் ஜான்சன் லண்டனில் உள்ள செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1,400 கி.மீ., தூரம் ஸ்கூட்டியில் பயணித்து மகனை பத்திரமாக அழைத்து வந்த வீரத் தாய்…!
சென்னை பீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த தம்பதிக்கு கொரோனா…!
ஜான்சனின் உடல்நிலை சற்று மோசமடையவே கடந்த 6 ஆம் தேதி அவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து சிறந்த மருத்துவக் குழுவினர் பிரிட்டன் பிரதமருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடலும் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாக மருத்துவமனை வட்டாரங்களும், டவுனிங் ஸ்ட்ரீட் வட்டாரங்களும் மக்களுக்கு நம்பிக்கையூட்டி வந்தன. இந்நிலையில் கடந்த 3 இரவுகளாக அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைகளின் பலனாக போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரிட்டனில் இதுவரை கொரோனா வைரஸுக்கு சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவின் வீரியம் குறையாத நிலையில் ஊரடங்கை தொடர்ந்து கடைபிடிக்குமாறு பிரிட்டன் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. இது மட்டுமல்லாமல் பிரிட்டனில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னலமற்று பணியாற்றி வரும் பொது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அந்நாட்டு முக்கிய பிரபலங்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் ஹாரி கேன், கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் பாடகர் கேரி பார்லோவ், நடிகைகள் ராச்சல் வெய்ஸ், ஸ்பெயின் காலப்ந்து வீரர் ஃபேப்ரிகஸ், உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட பிரபலங்கள் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM