இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் பயிற்சிக்காக ரஷ்யா சென்ற 4 இந்திய விண்வெளி வீரர்கள் நலமுடன் இருப்பதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இத்தாலியில் மட்டும் 16 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரை கொரோனா பலி கொண்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஸ்பெயினில் சுமார் 13 ஆயிரத்து 300 பேர் மரணமடைந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மிகவும் மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் நெருங்கி விட்டது. அங்கு 3 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோய் தொற்றின் மையமான நியூயார்க்கில் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் பயிற்சிக்காக ரஷ்யா சென்ற 4 இந்திய விண்வெளி வீரர்கள் நலமுடன் இருப்பதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. விண்ணில் செல்வதற்கான பயிற்சிகளைப் பெறுவதற்காக ரஷ்யா சென்ற 4 இந்திய வீரர்களும் நான்கில் ஒரு பங்கு பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது ரஷ்யாவில் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய விண்வெளி வீரர்கள் நான்கு பேரின் உடல் நலமும் நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் சில வாரங்கள் அவர்கள் அங்கு தங்கியிருந்து பயிற்சி பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
டோக்கியோ உள்ளிட்ட 6 பிரதேசங்களில் அவசர நிலை – ஜப்பான் பிரதமர் முடிவு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM