கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட், செல்போன் பிளாஷ் உள்ளிட்டவற்றால் ஒளியேற்றும்படி பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று நாடுமுழுவதும் மக்களுடன் இணைந்து பல்வேறு தலைவர்களும் தீபங்களை ஏற்றினர். டெல்லியில் உள்ள தமது இல்லம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஆளுயர குத்துவிளக்கை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தீப ஒளி ஏற்றினார்.

image

வல்லபாய் படேலின் சிலை விற்பனைக்கு… OLXல் பதிவிட்ட மர்மநபர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில், பாஜக கட்சி தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “கொரோனாவை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன் உதாரணமாகத் திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா தடுப்பில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது.

Image

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா : எந்தெந்த மாவட்டங்கள்.. எத்தனை பேருக்கு?

130 கோடி இந்திய மக்களின் ஒற்றுமையை நேற்று இரவு 9 மணிக்கு நாம் பார்த்திருப்போம். கொரோனாவுக்கு எதிராக இது ஒரு நீண்ட போராக இருக்கும். ஆனால் அதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது. கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மக்கள் இவ்வளவு மதிப்பார்கள் என யாருமே கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வெளியே செல்லும் போதெல்லாம் உங்கள் முகத்தை மறைக்க வேண்டும். உங்கள் வீடுகளில் கூட உங்கள் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். முழு உலகிற்கும் இன்று மந்திரம் என்றால் அது சமூக விலகல் மற்றும் ஒழுக்கம் என்பதே” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.