கொரோனா வராமலிருக்க அடிக்கடி கைகழுவச் சொல்லப்படும் சூழலில், டெட்டால், லைஃப்பாய் தயாரிப்பு நிறுவனங்கள் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளன.
டெட்டால் தயாரிப்பாளரான ரெக்கெட் பென்கிசர் நிறுவனம் மீது லைஃப்பாய் சோப் தயாரிப்பாளரான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கொரோனா அறிகுறியுடன் வெளியே சுற்றினால் ரூ.76 லட்சம் அபராதம் – சவுதி அரசு தடாலடி !
டெட்டால் விளம்பரத்தில் தனது லைஃப்பாய் சோப் நிறம், அளவு மற்றும் வடிவத்தில் சோப்பைக் காண்பித்து, கைகழுவ இதுபோன்ற பார் சோப்புகள் உதவாது, டெட்டால் உபயோகியுங்கள் எனக் கூறுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிறக்கும் குழந்தைகளுக்கு பெயராகும் ‘லாக்டவுன்’, ‘கொரோனா’!!
சோப்பு போட்டு கைகழுவுங்கள் என நாடு முழுவதும் பரப்புரை செய்யப்படும் நிலையில், டெட்டால் விளம்பரம் மக்களை திசைதிருப்பும் செயலில் ஈடுபடுகிறது என இந்துஸ்தான் யுனிலீவர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த விளம்பரத்தை வருகிற 21-ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் ரெக்கெட் பென்கிசர் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM