ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 3 மாத தவணை சலுகையை கோருபவர்கள், சலுகை காலத்துக்குரிய வட்டியை செலுத்த வேண்டும் என இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி-ஐ அறிவித்துள்ளது.
அமலுக்கு வந்த ஊரடங்கு – வங்கிக் கடனுக்கான இஎம்ஐ செலுத்துவதில் சலுகைகள்?
கொரோனா வைரஸ் தாக்கத்தால், தொழில்கள், வேலைகள் முடங்கியுள்ள நிலையில், வங்கியில் கடன் பெற்றவர்கள், 3 மாத காலத்துக்கு தவணை செலுத்துவது ஒத்திவைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியது. மேலும், வங்கிகள் கடன் செலுத்தாதவர்களின் விவரங்களை, சிபில் உள்ளிட்ட ஏஜென்சிகளுக்கு தகவல் அளிக்க வேண்டியதில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இது கடன் வாங்கியவர்களுக்கு சிறிது நம்பிக்கை அளித்திருந்த நிலையில், தற்போது வங்கிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 3 மாத சலுகை திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள், சலுகை காலத்துக்கான வட்டியை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
உதாரணமாக, 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கியவர், இனி 15 ஆண்டுகள் கடன் செலுத்த வேண்டியிருந்தால், 3 மாதங்களுக்கான வட்டி அதாவது சுமார் 2 லட்சத்துக்கு 34 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த நேரிடும். இதேபோல 6 லட்ச ரூபாய் வாகனக் கடன் பெற்றவர், இனி 54 மாதங்கள் செலுத்த வேண்டியிருந்தால், 3 மாத சலுகையை பெற்றால், கூடுதலாக 19 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
கொரோனா: மற்ற நாடுகளைவிட இந்தியாவில் பரவல் குறைவு என கணிப்பு
அதேநேரத்தில் 3 மாத சலுகை கோராத வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் வட்டியும் செலுத்த வேண்டியதில்லை என எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதேபோல, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி.யும் தவணை சலுகையை கோருபவர்கள், அந்த காலத்துக்கான வட்டியை கூடுதலாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM