தமிழகத்தில் கொரோனாவால் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதனால் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ஆக அதிகரித்தது. அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நெல்லையும் கோவையும் முதலிடத்திலுள்ளன. இந்த மாவட்டங்களில் தலா 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்த இடத்தில் சென்னையும், ஈரோடும் உள்ளன. இவ்விரு மாவட்டங்களிலும் தலா 26 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் 20 பேரும், நாமக்கல்லில் 18 பேரும், திண்டுக்கல்லில் 17 பேரும் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மதுரையில் 15 பேரும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 14 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர், ராணிப்பேட்டையை உள்ளடக்கிய வேலூர் பகுதியில் மொத்தம் 9 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சேலத்தில் 6 பேரும், கன்னியாகுமரி மற்றும் சிவகங்கையில் தலா 5 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் மூவருக்கும், தூத்துக்குடியில் மூவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மற்றும் திருவண்ணாமலையில் தலா இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தஞ்சை, விருதுநகர், திருப்பூரில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
“பனை ஓலையில் மாஸ்க்” – கிராமப்புற தம்பதியினர் அசத்தல்..!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM