கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சூழலில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றை தற்காலிக மருத்துவமனைகளாக பல நாடுகளும் மாற்றி வருகின்றன.
பிரேசில் நாட்டில் பிரசித்தி பெற்ற இரண்டு கால்பந்து மைதானங்கள், தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. சாவோ பாலோவில் உள்ள பகேம்பு மைதானம் மற்றும் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகனா மைதானம் ஆகியவற்றை தற்காலிக மருத்துவமனைகளாக அந்நாட்டு அரசு மாற்றி வருகிறது. பகேம்பு மைதானம், 200 படுக்கைகள் கொண்ட மருத்துதுவமனையாகவும் மரகனா மைதானம் 400 படுக்கைகள் கொண்ட மைதானமாகவும் மாற்றப்படுகிறது. ரியோடி ஜெனிரோவில் புதிதாக எட்டு இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல, நியூயார்க்கின் மத்திய பூங்காவில் தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இங்கு 68 படுக்கை வசதிகளுடன் தற்காலிக மருத்துவமனை உருவாக்கப்பட்டு வருகிறது. மவுன்ட் சினாய் மருத்துவமனை அருகே கூடாரம் அமைத்து தற்காலிக சிகிச்சை மையம் 2 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே வெம்ப்ளியில் பிரிட்டிஷ் மருத்துவப்பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. பர்னிச்சர் கடை ஒன்றின் கார் நிறுத்தும் மையத்தில் இதற்கான தற்காலிக இடம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாசம்கொட்டி வளர்த்த பாட்டி மரணம்: ஊரடங்கால் வீடியோ காலில் கண்ணீருடன் பேரன் இறுதி அஞ்சலி..!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீசில், கடற்கரையை ஒட்டிய பூங்கா ஒன்று, கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு வெளிநபர்கள் யாரும் வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் லாஸ் வேகாசில் 2 ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையங்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே லாஸ் வேகாஸ் மாகாணம் நவேடாவில், கால்பந்து மைதான பகுதி, வீடற்ற மக்களுக்கான தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு வீடற்ற மக்களுக்கான கட்டடம் திடீரென மூடப்பட்டுள்ளதால், ஏராளமானோர் தங்க இடம் இன்றி தவித்த நிலையில், கால்பந்து மைதான வாகன நிறுத்துமிடம், தற்காலிக தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது. சமூகஇடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM