கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் மார்ச் 29-ம் தேதி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர்கள் தங்களது சிகிச்சை முறைகளை விளக்கினர். மேலும், கொரோனாவுக்கு கபசுரக் குடிநீரை பரிந்துரை செய்தனர். மருத்துவர்கள் கூறியதைக் கேட்டறிந்த பிரதமர் இதுகுறித்து பரிசீலிப்பதாகக் கூறினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சித்த மருத்துவர் கு.சிவராமன், “கொரோனாவைக் கட்டுப்படுத்த மிக மிக அத்தியாவசியமானது ஊரடங்கு உத்தரவு மட்டும்தான். சமூகப் பரவலைத் தடுப்பதற்காக அடுத்த இரண்டு வாரங்களுக்கு அனைத்து மக்களும் தனித்திருப்பது. வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும். கபசுரக் குடிநீர் என்பது ஆயுஷ் துறையும் மத்திய சித்த மருத்துவக் கவுன்சிலும் சேர்ந்து நோயுற்றவர்களுக்கும் அல்லது இந்த நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்களுக்கும், நோய் உற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஒரு பாதுகாப்புக்காக கூறப்பட்ட மருந்து.
Also Read: கொரோனா அப்டேட்ஸ்… விசாரித்த உண்மைகள், விரிவான அலசல்கள்! | A to Z of Corona
இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கும் என்பதற்காக தேர்ந்தெடுத்து அரசுக்கு ஆலோசித்து தெரிவித்த ஒரு மருந்து. எல்லோரும் இதை வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளலாம் என எண்ணி இந்த மருந்தை தேடி அலைந்து ஊரடங்கை மறுப்பது தவறான செயல்” என்றார்.