பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா வைரஸ் பரவும் வேகத்துக்கு ஈடாக அதற்கான எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் உலகம் முழுவதும் போர்க்கால வேகத்தில் நடைபெற்றுவருகின்றன. உலகின் எந்தச் சூழலையும் உலக அரங்கில் தன் கரத்தை வலுப்படுத்தும் வாய்ப்பாகவும் பொருளாதார முதலீடாகவும் கருதும் அமெரிக்கா இதிலும் முதலிடத்தில் இருக்கிறது!

Summit

அமெரிக்க அரசாங்கத்துக்குத் துணையாகக் களம் இறங்கியுள்ள ஐபிஎம் நிறுவனம், `சம்மிட்’ என்றழைக்கப்படும் சூப்பர் கம்ப்யூட்டரின் செயற்கை அறிவை கொரோனாவுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளது !

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவுக்குப் போட்டியாய்த் திகழ்ந்த ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யாவின் இடத்தைச் செயற்கை அறிவுப்போட்டி நிகழும் இன்றைய சூழலில் சீனா பிடித்துக்கொண்டது. சீனாவின் `சன்வே தைஹூலைட்’ என்றழைக்கப்படும் உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டருக்குப் பதிலடியாக, 2018-ல் அமெரிக்காவின் ஐ.பி.எம் மற்றும் என்விடியா நிறுவனங்கள் இணைந்து கட்டமைத்த `சம்மிட்’ என்றழைக்கப்படும் சூப்பர் கம்ப்யூட்டரின் தொழில்நுட்பத் திறமை சீனாவின் சன்வே தைஹூலைட் சூப்பர் கம்ப்யூட்டரைவிட இருமடங்கு அதிகம். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், சூப்பர் கம்ப்யூட்டர் சாம்பியன் கோப்பையை இன்றுவரை அமெரிக்கா தக்கவைத்துக்கொண்டுள்ளது.

கம்ப்யூட்டர் என்றதும் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பிசிக்களும் லேப்டாப்புகளும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இரண்டு டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவில் 340 டன்கள் மொத்த எடை கொண்ட உபகாரணங்களால் கட்டமைக்கப்பட்ட `சம்மிட்’ ஒரு தொழில்நுட்ப அற்புதம்.

Research at IBM

இதன் ஆற்றலை கணிப்பொறி தொழில்நுட்ப மொழியில் குறிப்பிட வேண்டுமென்றால் இருநூறு பெட்டாப்ளாப். அதாவது ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டு மில்லியன் சராசரி கணிப்பொறிகளின் மொத்த ஆற்றல். நொடிக்கு இருநூறு கதிரிலியன் கணக்கீடுகளை அலசும் திறமைவாய்ந்தது சம்மிட். ஒரு கதிரிலியன் என்பது பத்துக் கோடி என்பதையும் தெரிந்து கொண்டால் சம்மிட்டின் வேகத்தைப் புரிந்துகொள்ளவது சுலபமாகும்.

கொரோனாவுக்கான தீர்வைக் கண்டுப்பிடிப்பதில் இந்தச் சூப்பர் கம்யூட்டரின் பங்கு என்ன ?

வைரஸ் கிருமியினால் உண்டாகும் பல்வேறு நோய்களின் சிகிச்சைக்கு உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இம்மருந்துகளின் மூலக்கூறுகளை மாற்றியமைப்பதின் மூலம் இன்னும் பல மருந்துகளை உருவாக்கலாம். அத்தனை மருந்துகளையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சோதனைக்கு உட்படுத்திப் பரிசோதிப்பதற்குப் பல ஆண்டுகள் தேவை ! இதைத்தான் எளிதாக்குகிறது சம்மிட்.

Representational Image

கொரோனா வகை வைரஸான கோவிட் 19 கிருமியின் தன்மைகளையும் மருந்துகளின் மூலக்கூறுகளையும் இந்த சூப்பர் கம்ப்யூட்டரின் செயற்கை அறிவின் மூலம் அதிவிரைவாக ஒப்பிட்டு ஆராய்ந்து, எந்தெந்த மருந்துகள் கிருமியை அழிப்பதிலோ எதிர்ப்பதிலோ சிறப்பாகச் செயலாற்றும் என்ற முதல் தகவலை மிகக் குறைந்த கால அவகாசத்தில் பெற்று அவற்றை மட்டும் அடுத்தகட்ட சோதனைக்கு உட்படுத்த முடியும். இதன் மூலம் தேவையற்ற காலவிரயத்தைத் தவிர்க்கலாம்.

இதன் முதல் கட்டமாக, உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு கொரோனா மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகளில் விரைவான தீர்வை தரும் என நம்பக்கூடிய எட்டாயிரம் ஆராய்ச்சிகளை சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டரின் மூலம் அலசியதில் 77 முடிவுகள் நம்பிக்கை அளிக்கக்கூடியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது கொரோனாவுக்கு எதிராக நம்பிக்கை அளிக்கும் 77 மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. மனித முயற்சியில் நீண்ட காலம் பிடிக்கும் இந்த ஆராய்ச்சிக்கு சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் எடுத்துக்கொண்ட கால அவகாசம் இரண்டே நாள்கள்.

Representational Image

நம்பிக்கை அளிக்கக்கூடிய மருந்து மூலக்கூறுகளைக் கண்டறிந்தாலும் இவற்றை அடுத்தடுத்த சோதனைகளுக்கு உட்படுத்தி உரிய மருந்தினைக் கண்டுப்பிடிக்க இன்னும் பல வாரங்களோ அல்லது சில மாதங்களோ ஆகலாம். அல்லது அமெரிக்காவுக்கு முன்னால் வேறு எந்த நாடாவது முந்திக்கொள்ளலாம். .. அது நம் இந்தியாவாகக் கூட இருக்கலாம். அதுவரை நம்பிக்கையுடன் வீட்டிலிருப்போம். உயிர்களைக் காப்போம்.

காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.