இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு 694 ஆக இருந்த நிலையில் இன்று அது 724 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 16லிருந்து 17 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM