பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
1. இது புது வைரஸ் என்பதால் மனிதர்களிடம் இவ்வைரஸிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இல்லை.
2. 10-ல் ஒருவருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பதால் பரிசோதனைகளின்றி அதை உறுதிப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
3. ஆரம்பத்தில் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் பரிசோதிக்காமல் விட்டது பெரும் தவறு. தற்போது அவர்களைத் தேடுவதும் கடினமான காரியம். இதை Dr.ஜேக்கப் ஜான் போன்ற வைராலஜிஸ்ட் சொன்னதை அரசு கேட்கவில்லை.

4. PCR பரிசோதனை மூலம் குணமடைந்தவர்கள் அறிகுறி முற்றிலும் குறைந்த நிலையில், அடுத்த 8 நாள்களுக்கு நோயைப் பிறருக்குப் பரப்ப முடியும் என்பது சமீபத்திய பெய்ஜிங் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதையும் தடுக்க நடவடிக்கை இல்லையெனில், நோயைக் கட்டுப்படுத்துவது சிரமம்.
5. குழந்தைகள் நோய் தாக்கம் இல்லாமல் இருந்தும் அதிக நாள்கள் வைரஸை வெளியேற்றி பிறருக்கு நோயைப் பரப்ப முடியும். அதைக் கணக்கில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. தாயிடமிருந்து கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது. அதையும் கண்டறிந்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. மலம் மூலம் வைரஸ் வெளியேறி நீண்ட நாள்கள் வரை இருக்கும் என்பதால், அதற்கான நடவடிக்கை இல்லையெனில், கட்டுக்குள் கொண்டுவருவது கடினம். (அதனால் ஒருவர் கழிவறையைப் பயன்படுத்திய சிறிது நேரம் கழித்தே அடுத்தவர் பயன்படுத்த வேண்டும்)

8. பெரும்பாலான இந்திய வீடுகளில் அனைவரும் உபயோகிக்கும் பொதுக் கழிப்பிடம் மட்டுமே உள்ளதால் வைரஸ் அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது எளிதல்ல.
9. தென்கொரியாவில் ஒரு நோயாளி 5,000-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதுபோல் தனிநபர் ஒருவர் உரியத் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவில்லையெனில் பெரும் பாதிப்பு ஏற்படும். நம்நாட்டில் அத்தகைய விழிப்புணர்வு அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்பதால், விதிமுறைகள் மீறப்பட்டு நோய் அதிகம் பரவும் வாய்ப்புள்ளது.
அறிவியலும் நேர்மையும், உண்மையும் நம்மை வழிநடத்தி நோயைத் தடுக்க அனைவரும் முன்வர வேண்டும். அது மட்டுமே நோயைக் கட்டுப்படுத்தும் ஒரே வழி.
– மருத்துவர் வீ.புகழேந்தி (சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கம்)