திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், காதலனே பிரசவம் பார்த்ததால் கல்லூரி மாணவிக்கு குழந்தை இறந்து பிறந்தது. இந்நிலையில் ஆபத்தான நிலையில் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவியும், அவரது உறவினரான அதேபகுதியை சேர்ந்த சவுந்தர் என்பவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இவர்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், அப்பெண் கர்ப்பிணியானார். நிறைமாத கர்ப்பிணியான அப்பெண்ணை, சவுந்தர் ஈகுவார்பாளையம் பகுதியில் உள்ள காப்புக்காட்டுக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது குழந்தையின் கை உடைந்த நிலையில் வெளியே வந்ததால், தொப்புள் கொடிக்கு பதிலாக குடலை துண்டித்ததாக தெரிகிறது.
இதையடுத்து அப்பெண்ணை தனது இருச்சக்கர வாகனத்திலேயே, 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் சவுந்தர். அப்பெண்ணுக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள், உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு வயிற்றில் இறந்த நிலையில் இருந்த ஆண் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இச்சம்பவம் குறித்து, கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி அப்பெண்ணின் காதலன் சவுந்தரை கைது செய்தனர்.
கொரோனா அச்சுறுத்தல்: டெல்லியில் 5 பேருக்கு மேல் ஒன்றாக கூட காவல்துறை தடை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM