நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்ய காவல் துறையினர் ஆறடி நீளமுள்ள கிடுக்கியை பயன்படுத்தி வருகின்றனர்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக நேபாள அரசு, மார்ச் 24 ஆம் தேதி முதல் வருகிற 31 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், உத்தரவையும் மீறி சிலர் சாலைகளில் தேவையில்லாமல் உலா வருவதால் அவர்களை பிடிக்க நூதன முறையை கையாண்டு
வருகின்றனர்.
“இவர் கழுத்தில் பாசக் கயிற்றை வீசுங்கள்” – எமதர்மராஜா வேடத்தில் இறங்கிய காவல்துறை
அதன்படி, ஆறடி நீளமுள்ள இரும்புக்கு கிடுக்கி மூலமாக, அவர்களை பிடித்து, காவல் துறையினரின் வாகனத்தில் ஏற்றுகின்றனர். சமூக
இடைவெளியை பின்பற்றும் வகையில் இந்த முறையை காவல் துறையினர் பின்பற்றி வருகின்றனர். கிடுக்கிபிடி பிடிக்கும் நேபாள காவல்துறையினர்
ஊரடங்கை மீறுபவர்களை கைது செய்ய நூதன முறை சமூக விலகலை பின்பற்றும் காவல் துறை.
இந்தியாவில் ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமை முகாமில் இருக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக
வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த மக்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது இடங்களில் நடமாட்டம் அதிகரித்தது. குறிப்பாக, அசைவ
உணவுப்பொருட்கள் வாங்க பல இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
“ஊரடங்கில் வீதிகளில் பணியாற்றும் முன்னாள் இந்திய வீரர்” ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு !
கொரோனா பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் முழுமையாக பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய
வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றுவோர் மீதும்
நடவடிக்கை தேவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM