அக்ஷய் குமார் நீங்கதான் என் ரியல் ஹீரோ என்று ஹர்திக் பாண்ட்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றை எதிரித்து போரிட அதிக நிதி தேவைப்படுவதால் , அரசுக்கு மக்கள் நிதியளிக்க முன்வர வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று உடனடியாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அக்ஷய் குமார் “இதுதான் சரியான தருணம், நம் நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு. நம்மால் முடிந்ததை இந்நேரத்தில் செய்ய வேண்டும். என்னுடைய சேமிப்பிலிருந்து ரூ.25 கோடியைப் பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன். நாம் உயிர்களைக் காப்பாற்றுவோம்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் அக்ஷய் குமாரின் இந்த நல்ல மனதைப் பாராட்டி இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்ட்யா, வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர், “இதற்குப் பிறகு நீங்கள்தான் என் நிஜ வாழ்க்கையின் ஹீரோ! Respect and respect only” எனக் கூயுள்ளார். மேலும் பிசிசிஐயும் இதற்கான நிதியை அறிவித்திருந்தது. அது குறித்து பாண்ட்யா, “ பி.சி.சி.ஐ.யின் சிறந்த முயற்சி இது. நாம் அனைவரும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து, இந்த வைரஸை எதிர்த்துப் போராட நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டிய நேரம் இது” என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு நிலவி வருவதால் பாண்ட்யா வீட்டிலேயே இருந்து வருகிறார். அந்த நேரத்தை எப்படி ஆக்கப்பூர்வமாகச் செலவிடுகிறார் என்பது குறித்து ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். தோழமைகளுடன் எக்சர்சைஸ் செய்யும் அந்தப் படத்திற்கு அவர், என் பேபிகளுடன் என்ன ஒரு விளையாட்டு எனத் தலைப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் பாண்ட்யாவுடன் அவரது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிக் மற்றும் குருனல் பாண்ட்யா மற்றும் அவரது மனைவி பங்கூரி சர்மா உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM