கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை தரப்பிலிருந்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தகவல்கள் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர், மனிதர்களிடையே கொரோனா மருந்தை பரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வு முன்னேற்றமடையவில்லை என்று கூறியுள்ளார். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine) மாத்திரைகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பெருமளவு உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

image

அத்துடன் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக இதுவரை 44 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அகர்வால், கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக நாடுமுழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

image

வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க தனி மருத்துவமனைகளை ஏற்பாடு செய்யவும் மாநில அரசுகளிடம் பேசி வருவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், சமூக விலகலை கடைபிடிப்பது மட்டுமே கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கைக்கொடுக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்?: மருத்துவர் விளக்கம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.