கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏர்ப்படுத்த ஆப்பிள் நிறுவனம் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா இன்று உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 30,896 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6,64,941 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 1,42,449 குணமாகியுள்ளனர். இந்நிலையில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.
புதுக்கோட்டையில் 1000 கிலோ காய்கறிகளை வீடு வீடாக சென்று இலவசமாக கொடுத்த விவசாயி
மேலும் சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா விழிப்புணர்வு குறித்த நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் பிரத்யேக செயலியையும், இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது.
“மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தாராளமாக பணம் தரவேண்டும்” – ப.சிதம்பரம்
அதிக விலைக்கு அரிசி விற்பனை – ஆலைக்கு சீல் வைத்து சார் ஆட்சியர் அதிரடி
கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ளவும் கூகுளின் துணை நிறுவனமான வெரிலி கடந்த சில நாட்களுக்கு முன் தனி இணையதளத்தை உருவாக்கியது. இதனையடுத்து ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவுடன் இணைந்து ஐபோன் பயன்பாட்டாளர்களுக்காக தனி செயலியையும், பிற பயனாளர்களுக்காக தனி இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள், சிகிச்சை முறைகளை தெரிந்துகொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM