Bigg Boss 7 Day 99: ‘மாயா என்னைவிட பெட்டர் பிளேயர்’- `அதிர்ச்சி’ அர்ச்சனா; விஷ்ணு பேசிய வீடியோ கால்
ஆட்டத்தின் இறுதிக்கட்டம். ‘ஹப்பாடா’ என்று ஜாலியாக இருக்கத் தோன்றினாலும் இது முக்கியமான பகுதி. வெற்றியாளர் யார் என்பது பார்வையாளர்களால் தீர்மானிக்கப்படவிருக்கும் நேரம். எனவே தனது ஒவ்வொரு அசைவையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டிய தருணம். சில திரைப்படங்கள் அதுவரைக்கும் சிறப்பாக இருந்தாலும் கிளைமாக்ஸ் சரியில்லாத காரணத்தால் தோற்று விடும். அப்படி ஆகி விடக்கூடாது. இப்படியொரு சூழலில் ‘மாயா என்னை விட பெட்டர் பிளேயர்” என்று அர்ச்சனா சொன்னது அபத்தமானது. ‘டைட்டில் வின்னர்’ என்று மற்றவர்களால் கிண்டலும் பாராட்டும்…