Technology

120Hz டிஸ்பிளே..50 மெகாபிக்ஸல் கேமரா..நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் கடந்த மாதம் 5ஜி நெட்வொர்க் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்தவாறு இருக்கிறது. இந்நிலையில் நோக்கியா நிறுவனம் G60 என்ற புதிய ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா G60 சிறப்பம்சங்கள்: 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.58 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.  டிஸ்பிளேவின் பாதுகாப்பிற்காகக் கொரில்லா கிளாஸ் 5 இருக்கிறது.  G60 ஸ்மார்ட்போனில் 5ஜி திறன் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 புராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக அப்டேட் கொடுக்கப்படும் எனவும் நோக்கியா நிறுவனம் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரையில் பின்பக்கமாக மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 50 மெகாபிக்ஸல் மெயின் கேமரா, 5 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்ஸார் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கமாக 8 மெகாபிக்ஸல் கேமரா இருக்கிறது. நைட் மோட் மற்றும் AI போர்ட்ரெயிட் போன்ற வசதிகளும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன்…

Read More
Technology

ட்விட்டரின் ஒட்டுமொத்த நிர்வாக குழுவும் நீக்கம்-எலான் மஸ்க்கே நேரடியாக நிர்வகிக்க திட்டம்?

ட்விட்டர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவையும் நீக்கிவிட்டு, எலான் மஸ்க்கே நேரடியாக நிர்வாகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் நிர்வாகத்திலும், ஊழியர்கள் மத்தியிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிட்டு வருகிறார். ட்விட்டர் நிறுவனம் தனது கட்டுப்பாடுக்கு வந்த உடனே அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பராக் அக்ரவால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், தலைமை சட்ட அதிகாரி விஜயா கட்டே உள்ளிட்டோரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க்….

Read More
Technology

ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி கட்டணம்: எவ்வளவு தெரியுமா?

ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு வழங்கப்படும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்-க்கு கைமாறியுள்ள நிலையில், அவர் ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக ட்விட்டரில் அளிக்கப்படும் சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் பிரபலங்கள், பெரிய நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு ‘ப்ளூ டிக்’ வழங்கப்படுகிறது. இந்த ப்ளூ…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.