“முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு தாரை வார்த்துவிட்டது!” – கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், “வரும் 29-ம் தேதி காலை 7 மணிக்கு அணையிலிருந்து நீர் திறக்கப்படும்” என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான போது நீர்மட்டம் 137 அடி மட்டுமே இருந்தது. அணையில் தண்ணீர் திறப்பு குறித்து தமிழக அரசு தரப்பில் எவ்வித உத்தரவும் வழங்கப்படவில்லை. தேனி மாவட்ட ஆட்சியருக்கு கூட இந்தத் தகவல்…