தந்தையின் கல்லறையில் மலர்தூவி வணங்கிய முகமது சிராஜ்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தன்னுடைய தந்தையின் கல்லறைக்கு சென்று மரியாதை செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ர கணக்கில் வெற்றிப்பெற்று வரலாற்று சாதனைப் படைத்தது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தத் தொடரில் முகமது சிராஜ் வழக்கமான மற்ற வீரர்களை போன்று சாதாரண சூழ்நிலையில் விளையாடவில்லை. போட்டி…