பெங்களூரு சிறையில் இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று இளவரசிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் 2014ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சசிகலா, அவருடைய உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாக இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று அதிகமானது சி.டி.ஸ்கேனில் தெரிய வந்ததை அடுத்து, ஆர்டிபிசிஆர்…