கேரளா: வெறி நாய்களின் அட்டூழியம்; கோழிக்கோட்டில் 8 பள்ளிகளுக்கு விடுமுறை; பின்னணி என்ன?
கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் நாய்களின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருவில் செல்வோரைத் துரத்துவது, கடிப்பது என கேரளாவின் பல பகுதிகளை நாய்கள் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கடந்த மாதம் கோழிக்கோடு கண்ணூர் பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை வெறிநாய் தாக்கியதில் அச்சிறுமி படுகாயமடைந்துள்ளார். அங்கிருந்த மக்கள் அடித்துத் துரத்திய பின்னரே அந்த நாய் சிறுமியைத் தாக்குவதை நிறுத்தியது. இதுபோல அந்த…