பூத்துக் குலுங்கும் பனைமரம்… பொன்னமராவதியில் அதிசயம்!
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமாரவதி அருகே வலையப்பட்டியில் உள்ள மலையாண்டி சுவாமி கோயிலின் மலைக்கு மேற்கில் நூற்றாண்டுகள் பழமையான பனைமரம் ஒன்று பூத்துக்குலுங்குகிறது. அதன் அருகில் நெருங்கும் போதே, அதிலிருந்து வரும் ஒருவித நறுமணம் நம்மை பரவசமடையச் செய்கிறது. பனைமரம் பூக்குமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும். ஆனால், சுமார் 80 லிருந்து 100 ஆண்டுகள் பழமையான தாளிப்பனை மரங்கள் பூக்கும் என்கின்றனர். இந்த வகை பனை மரங்கள் குறைவான அளவில் இருக்கும், மேலும் குறைந்துகொண்டே போவது தான்…