India

தடுப்பூசி- ‘இந்த வேகத்தில் போனால் இந்தியா ‘ஹெர்டு இம்யூனிட்டி’யை எட்ட 3.5 ஆண்டுகள் ஆகலாம்’

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான பணிகள் நாடு முழுவதும் நடந்து வரும் சூழலில், இந்தியாவில் தடுப்பூசி மூலம் கிடைக்கும் ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் கொரோனாவுக்கு எதிரான குழு நோய் எதிர்ப்பு சக்தி அனைவருக்கும் கிடைக்க, குறைந்தபட்சம் 3.5 வருடங்களாவது ஆகுமென வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில், தங்களிடம் தடுப்பூசி போதியளவு இல்லையென பல மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன. மொபைல் செயலியான ‘கோவின்’ ஆப் வழியாக தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் என்றால், தொழில்நுட்ப கோளாறுகளால் செயலியில் பல…

Read More
India

கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள்… கொரோனாவுக்கு பலியானவர்களா? – மக்கள் பீதி

புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்கள் என்று கருதப்படுவதால் மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது. இந்திய இதிகாசங்களில் மிகவும் புனிதமான நதியாக வர்ணிக்கப்படுவது கங்கை நதி. தற்போதுள்ள மத்திய அரசும் கங்கையை தூய்மைப்படுத்துவதற்காக தனித் துறையை உருவாக்கி கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. இவையெல்லாம் ஒரு புறமிருக்க, மக்கள் அனைவரையும் அச்சம் கொள்ளச் செய்யும் வகையில் நூற்றுக்கணக்கான சடலங்கள், கங்கை நதியில் மிதக்க விடப்பட்டுள்ளன….

Read More
India

புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி: திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி செய்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் முன்னரே நியமன எம்எல்ஏக்களை அறிவித்தது ஜனநாயக படுகொலை என அவர் விமர்சித்துள்ளார். கூட்டணிக் கட்சி என்றும் பாராமல் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திருமாவளவன், சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சியை திமுக முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். என்.ஆர். காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக தகவல் புதுச்சேரி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.